2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வறுமையான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 20 வீடுகள் பயனாளிகளிடம் சனிக்கிழமை (25) கையளிக்கப்பட்டன.

இதுதொடர்பில், ஏறாவூர் ஸலாமா அமைப்பின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் எம்.எல். முஹம்மத் இர்ஷாத் தெரிவிக்கையில்,
கட்டார் நாட்டு மன்னர் கலீபா பின் அலி அல் ஹித்மி இந்த வீடமைப்புக்கு நிதியளித்திருந்தார்.

மேர்சி லங்கா (Mercy Lanka)  நிறுவனம் இந்தத் திட்டத்தை அமுலாக்கியிருந்தது. ஏறாவூர் ஸக்காத் பவுண்டேஷனால் இந்த வீடமைப்புக்கான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

'அல் ஹித்மி கிராமம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீட்டுத் திட்டத் திறப்பு விழாவில் கட்டார் நாட்டு மன்னரின் பிரதிநிதியாக பக்ர் ரஷாஸ், மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நாஸர் ஹஸன், அதன் திட்ட முகாமையாளர் அஷ்ஷேய்ஹ் முஹம்மத் முனாஸ் ஆகியோரும் ஏறாவூர் ஸக்காத் நிதியம் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் பயனாளிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஆறு மாத காலப் பகுதிக்குள் இந்த வீடுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X