-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரீப் புறொக்டர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து கேரளக் கஞ்சா வைத்திருந்த நிசான் கனி றாசிக் என்ற 37 வயதான குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சா இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போதைவஸ்துத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸார், மேற்படி கஞ்சாவை கைப்பற்றியதுடன் அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.