Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (26) ஏறாவூர் நகர சபையில் நடத்தப்பட்ட விஷேட அமர்வில் நான்கு கண்டனத் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியதாக நகரசபைத் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம் தெரிவித்தார்.
நகரசபைச் செயலாளரின் அழைப்பின் பேரில் நகரசபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், எதிரணி வரிசையிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுயேச்சைக் குழு மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களும் விஷேட அமர்வுக்குச் சமுகமளித்திருந்தனர்.
விஷேட அமர்வின் போது பின்வரும் நான்கு தீர்மானங்களை ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றியதாக நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற அலைபேசியூடான வரி அறவிடும் அங்குரார்ப்பண நிகழ்வு சபையின் முன் கூட்டிய தீர்மானத்துடன் முறைப்படி இடம்பெறாததால் அலைபேசி ஊடான வரி அறவிடும் செயற்பாட்டை அடுத்த அமர்வு வரும்வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தல்.
நகர சபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் நகரசபை ஊழியரால் தாக்கப்பட்டது, நகர சபையின் கௌரவத்தையும் நகர சபை உறுப்பினரின் சிறப்புரிமையையும் பாதிப்பதால் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தல்.
தாக்கிய நகர சபை ஊழியர், நகரசபையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்கள் முன்பாக தான் நடந்து கொண்ட முறைகேடான நடத்தையையிட்டு பொது மன்னிப்புக் கோருதல், நகரசபைக்குள் வெளி நபர்கள் நுழைந்து அங்கு கடமையாற்றும் ஏனைய ஊழியர்களைத் தாக்கி அவமானப்படுத்திய விடயம் தொடர்பாக விசாரணை செய்தலும் அது விடயமாக நடவடிக்கை எடுத்தல் என நான்கு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே நகரசபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத்தைத் தாக்கியதாகக் கூறப்படும் நகரசபை ஊழியர் விஷேட அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது சபைக்குள் வந்து நகரபிதா, செயலாளர், நகரசபை உறுப்பினர்கள் மத்தியில் பொது மன்னிப்புக் கோரியிருந்தார்.
தாக்குதலுக்குள்ளான நகரசபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் மற்றும் நகரசபைத் தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் குறித்த ஊழியரின் குடும்ப நிலைமை கருதி அவரை மன்னிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
37 minute ago
3 hours ago