2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சமூர்த்தி சமாஜத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சமூர்த்தி சமாஜத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் திங்கட்கிழமை (27) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குரிய சமூர்த்தி சமாஜத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

சமூர்த்தி சமாஜத்தின் புதிய தலைவராக கோ.விஜிதாவும் செயலாளராக பதவிநிலை உத்தியோகஸ்தரான வாழ்வின் எழுச்சி முகாமையாளர் வே.வரதராஜன் உட்பட 21 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இத்தெரிவுக்குழு கூட்டத்தில், வாழ்வின் எழுச்சி முகாமையாளர் வே.வரதராஜன், சமூர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .