2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா செடி வளர்த்தவருக்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் கஞ்சா செடிகளை வைத்திருந்த சந்தேக நபருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.றியாழ், 9ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.

வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் இவரிடமிருந்து 10 கஞ்சா செடிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .