2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத சிறுவர்களுக்கான பெருமளவு இனிப்பு பண்டங்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் என்பன சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது திங்கட்கிழமை (27) கைப்பற்றப்பட்டன.

உணவு பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பொதுச் சுகாதார சுகாதார பரிசோதகர்களினால் மேற் கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மனித பாவானைக்குதவாத உணவுப்பொருட்கள்  கைப்பற்றப்பட்டன.

இச்சுற்றிவளைப்பில், சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  யு.எல்.நசிர்தீனின்  ஆலோசனையுடன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.றபீக்கின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், என்.கருணாகரன், ஏ.கே.திஸ்ஸவீரசிங்க, ரி.மிதுன்ராஜ், ஜே.ஜெயனிகாந் ஆகியோரால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக  காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.றபீக் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .