2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உணவு பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும்  சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் நேரடியாகச் சென்று உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர், திங்கட்கிழமை (27) மாலை வழங்கினர்.

உணவு பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்வது? தொற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது? ஊழியர்கள் எவ்வாறு சுகாதாரமான முறையில் நடந்து கொள்வது? ஆகியவை குறித்து இதன்போது விளக்கிக் கூறியதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .