Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தொழுநோய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என தோல்நோய் வைத்திய நிபுணர் என். தமிழ்வண்ணன், செவ்வாய்க்கிழமை(28) தெரிவித்தார்.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சமூகத் தலைவர்களுக்கு தொழுநோய் பற்றி விழிப்புணர்வூட்டும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோல்நோய் வைத்திய நிபுணர் என். தமிழ்வண்ணன் தலைமையிலான வைத்திய குழுவினர் தொழுநோய் பற்றி விழிப்புணர்வூட்டினர்.
நிகழ்வில் தொடர்ந்து விளக்கவுரையாற்றிய தமிழ்வண்ணன் கூறியதாவது,
கொழும்புக்கு அடுத்த படிநிலையில் தொழுநோய்; மட்டக்களப்பில்தான் காணப்படுகின்றது. ஆயினும் மாவட்ட மக்களின் விகிதாசாரப்படி பார்த்தால் இலங்கையில் ஆகக் கூடுதலான தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் காணப்படுகின்றார்கள்.
எவ்வாறாயினும் இந்த நோயைக் கட்டுப்படுத்த எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
ஆரம்ப காலகட்டங்களிலே தொழுநோய் ஒரு பயங்கரம் நிறைந்த ஒன்றாகவும் தெய்வக் குற்றமான நோய் என்றும் மக்கள் நம்பிக்கை இருந்தது.
தொழுநோய், ஒருவரை கொல்லாது. ஆயினும் மனிதர்களை விகாரத்துக்குள்ளாக்கி பலவகைப் பாதிப்புக்களையும் ஏற்படுத்த வல்லது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதால் அதன் தீவிரத் தன்மையை உணர்ந்து பொதுமக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு இந்நோய் ஒரு சவாலாக அமைந்துவிடக் கூடாதென்பதால் இப்பொழுதிருந்தே சமூக மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் விவிரித்தார்.
இந்நிகழ்வில் தொழுநோயின் விளைவுகளைப் பற்றி எவ்வாறு அறிவூட்டலாம் என்பது குறித்து அக்கறையுள்ள சகல தரப்பாரும் கரிசனையோடு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சுகாதார அதிகாரிகள் முன்வைத்தனர்.
இப்பிரதேசத்தில் மட்டுமல்ல பொதுவாகவே நாடெங்கிலும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் வழங்க முடியும் என்பதால் தமது அனைத்து நிகழ்வுகளுக்கும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம், பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.எப். அப்துல் றஹுமான், தொழுநோய்த் தடுப்பு வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம், மாவட்ட தொழுநோய்த் தடுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. மனோகரன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்;லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago