Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 81.17 வீதத்தை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இதில் 81.52 வீதத்தை பெற்று கண்டி கல்வி வலயம் முதலாமிடத்தையும, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 81.17 வீதத்தை பெற்று இரண்டாமிடத்தையும், அக்கரைப்பற்று கல்வி வலயம் 80.52 வீதத்தை பெற்று மூன்றாமிடத்தையும் கொழும்பு கல்வி வலயம் 80.08 வீத்தை பெற்று நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.
கடந்த முன்று வருடங்கள் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாமிடத்திலே இருந்தது. இம்முறை இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. 9 வீத்தினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அவறறை சீர்செய்து முன்னேற வேண்டும்.
கடந்த காலங்களில் இந்தக் கல்வி வலயத்தின் வெற்றிக்காக உழைத்த, பாடுபட்ட வலயத்தின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதன் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக இந்த கல்வி வலயத்தின் ஆரம்பகர்த்தாவான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கும் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago