Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (29) நண்பகல்; மட்டக்களப்பு பிரதான தபாலகத்துக்கு முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மைக்காலமாக தபால் திணைக்களத்தில் நிலவும்; சம்பள முரண்பாடு, நிர்வாக ரீதியான முரண்பாடுகளை நீக்ககோரியே இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், அரச சுற்றறிக்கை உருவாக்கிய முரண்பாடுகளை உடனடியாக நீக்கு, சம்பள முரண்பாட்டை நீக்கு, தரம் 1 மற்றும் தரம் 2 ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும் என பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
தபாலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி அதன் சேவையினை சிறந்த முறையில் கொண்டுச் செல்ல புதிய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமது நியாயமான கோரிக்கைகளை புதிய அரசாங்கம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் தபாலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தபாலகத்தின் சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடாத வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .