Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
பாசிக்குடாவில் ஓவ் சைற் தன்னியக்க இயந்திரம் (ழகக ளவைந யவஅ) செவ்வாய்கிழமை (28) சம்பத்வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச பொதுமக்களின் நன்மை கருதியே பாசிக்குடா வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பத் வங்கியின் 341ஆவது ஓவ் சைற் தன்னியக்க இயந்திரம் என்பதுடன் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது தன்னியக்க இயந்திரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி சம்பத்வங்கி முகாமையாளர் எஸ்.நீலவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சம்பத் வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ந.ஜெயசீலன் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு சம்பத்வங்கி முகாமையாளர் எஸ்.சுரேஸ் காத்தான்குடி சம்பத்வங்கி முகாமையாளர் ரீ.சிவபாலன் மற்றும் செங்கலடி சம்பத்வங்கி முகாமையாளர் எஸ்.கோபிநாத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த தன்னியக்க இயந்திரம் திறக்கப்பட்டதன் மூலம் சிரமமின்றி பணத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago