2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நள்ளிரவில் கூரையை பிரித்து திருடர்கள் கைவரிசை

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச் நகர் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டுக் கூரையை உடைத்து உள் நுளைந்த திருடர்கள், அங்கிருந்த பணம், நகைகளை திருடிச்சென்றுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மிச் நகர் கிராமத்தைச் சேர்ந்த காசிம்பாபா காதர் முஹைதீன் என்பவரின் வீட்டிலேயே செவ்வாய்க்கிழமை (28) இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை படுக்ககையிலிருந்தவாறு அலைபேசியை தேடியபோது அது காணாமல்போயிருந்ததாகவும் எழுந்து பார்க்கும் போது, கூரை உடைந்திருப்பதை கண்டதாகவும் குறித்த வீட்டிலுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

பின்னர், வீட்டிலுள்ள தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .