Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
19ஆவது திருத்தம் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய விடயம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் புதன்கிழமை (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலம், இனப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் ஆகும். இந்தக் காலத்தை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் பயன்படுத்தவேண்டும்.
19ஆவது திருத்தத்துக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று ஒன்றுபட்டு வாக்களித்தமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன் மூலம் பழைய நிலைக்கு வந்துள்ளோம். மீண்டும் ஓர் இக்கட்டான நிலைக்கு இந்த நாட்டை எமது தலைவர்கள் இட்டுச் செல்லாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த சாதனையின் வெற்றியில் பாராட்டப்படவேண்டியவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மற்றையவர் சோபித தேரர்.
மக்கள் மாற்றத்துக்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். மாறாக, வேறு யாருடைய கதைக்காகவும் மக்கள் வாக்களிக்கவில்லை. சிலர் இந்த மாற்றத்துக்காக உரிமை கோருகின்றனர். அவ்வாறில்லை. மக்கள் விரும்பி மாற்றத்துக்காக வாக்களித்தனர்.
நாம் ஆரம்பித்துள்ள தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.
தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சில பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை உரியவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றோம். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் இதனை செயற்படுத்த ஆயத்தமாக இருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .