Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 01 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசியக் கொடியை அவமதித்தவர்களுக்கு அரசாங்கமும் நீதித்துறையும் தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைகழக முன்னாள் உபவேந்தரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி கே.பிரேம்குமார் மட்டக்களப்பு மாவட்ட இணையம் பணிப்பாளர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் முன்னாள் மகிழவெட்டுவான் மஹா வித்தியாலய அதிபர் கலாபூஸணம் ஏ.இருதயநாதன் மட்டக்களப்பு மாவட்ட சைவநெறிக்கழக தலைவர் சிந்தனைச்செம்மல் சு.சிவப்பிரகாசம் ஆகியோர் இது தெபடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினரை அடையாளப்படுத்தும் வர்ணங்களை தேசியக்கொடியிலிருந்து அகற்றியுள்ளமை சிறுபான்மை சமுகங்களை அவமதிக்கும் படுபாதகச் செயலாகும். நாட்டையும் மக்களையும் அவமதித்துள்ள இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கௌ;ளவேண்டும்.
குறித்த தேசிய கொடி அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பாரிய பொறுப்பிலுள்ள இவர்கள் இவ்வாறு நடப்பது பெரிதும் கண்டிக்கத்தக்கமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025