Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 01 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தினுள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (01) புகுந்த காட்டு யானைகள், அங்குள்ளவற்றுக்கு சேதம் விளைவித்துள்ளது.
அங்கிருந்த வீடு உட்பட பயன்தரு மர வகைகளுக்கு சேதம் விளைவித்துள்ளது.
எங்களின் வீட்டுப் பின்புறம் மரம் முறியும் சத்தம் கேட்டது வெளியில் வந்து பார்த்தபோது, நான்கு யானைகள் எமது வீட்டு எல்லைக்கு உட்பட்ட தென்னை மரங்கள், பப்பாசிமரம் போன்றவற்றை முறித்துக்கொண்டிருந்தன.
உடனடியாக நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறி அயல் வீட்டுக்கு சென்றோம். இதன் பின்னர் அந்த யானைகள் எமது வீட்டையும் சேதப்படுத்தியுள்ளது. இரண்டு தடவைகள் எங்களது வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக சேதத்துக்குள்ளான வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025