Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 02 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகளை காத்தான்குடி சுகாதர அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், காத்தான்குடி கடாபி ஹோட்டல் ஊழியர்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு ஹோட்டல் மேல் மாடியில் நேற்று(01) நடைபெற்றது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்பூட்டல் செயலமர்வில் ஹோட்டல் உரிமையாளர் எம்.அன்வர் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்ளும் கலந்து கொண்டனர்.
இதன் போது உணவை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஊழியர்களின் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, தொற்று நோய் போன்ற பல்வேறு விடயங்களை காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் இங்கு எடுத்துக் கூறினார்.
இந்த திட்டமானது காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உணவகங்கள் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் டாக்டர் நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .