2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'பல விடயங்களை தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர், யுவதிகள்'

Suganthini Ratnam   / 2015 மே 03 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

ஒரு நாட்டின் பல விடயங்களை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர், யுவதிகள் திகழ்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கனவு  காண்பிப்பதற்கு அல்ல, வழிகாட்டுவதற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு,  களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்தில் பல இன்னல்களையும் நெருக்கடிகளையும் இளைஞர்கள் சந்தித்தார்கள்.  தற்போது இங்குள்ள இளைஞர்கள் விளையாடுகின்றார்கள். இங்கு விளையாடுகின்ற இந்த இளைஞர்களை போன்ற சில இளைஞர்கள்,  சிறைச்சாலையில் வாடுகின்றார்கள்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒரு சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றது.

அபிவிருத்தியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கடந்த 65 வருடகாலமாக தெடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வு கிட்டும்வரை எமது அரசியல் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கும்' என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .