Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Sudharshini / 2015 மே 03 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்திற்குப் பின்னரும் இலங்கையிலே இருக்கக் கூடிய அரச தொழில்களிலே கொடிகட்டிப் பறந்தவர்கள் தமிழர்கள். பிரித்தானியர் காலத்தில் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழர்கள், தமிழர்கள் இந்த நாட்டிலே கல்விலே அன்றய காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், தற்போதைய காலத்தில் ஆராய்ந்து பார்த்தால் பாடசாலையில் கற்றுக் கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான எமது மாணவர்கள் இடைவிலக்கிச் செல்கின்றார்கள். இதனால் பாடசாலைகளிலே படிக்கின்ற தமிழ் மாணவர்களின் தொகை ஏனைய இன மாணவர்களைவிட குறைவடைந்துள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்
மட்.காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (02) பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில், அதிபர் கோ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
இந்த நாடு மூவினங்களுக்கும் சொந்தமானது. இந்நிலையில் எமது தமிழ் மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்குமபோதே அதிகளவு இடைவிலகிச் செல்லும் இந்நிலையானது தொடர்ந்து கொண்டிருந்தால் இந்த நாட்டில் நாங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம். என்பது மட்டும் உண்மை.
எமது கடந்தகால வரலாறுகளில் எமது ஏழ்மை, புவியியல் தன்மை போன்றன எமது மாணவர்களின் கல்வியைப் பாழாக்கின, ஆனால், தற்போது அந்தக் காரணிகள் அனைத்தும் விலக்கிக் செல்கின்றன. இந்நேரத்தில் எமது எதிர் கால சந்ததியினரின் கல்வியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காது விட்டால் இந்த நாட்டில் எமது மாணவர்களின் நிலமை மிகவும் மோசமடையும்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் விருத்தியடையா விட்டாலும், கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.பி.பி.எஸ். இறுதியாடுப் பரீட்சையிலே மட்டக்களப்பு – கல்லாற்றைச் சேர்ந்த மாணவன் அகில இலங்கையிலே முதலிடம் பெற்றான்.
இந்த வருடமும் மருத்துவத் துறையில் கல்லாற்றைச் சேர்ந்த மாணவன்தான் மாவட்டத்திலே முதலாவதாக வந்துள்ளான். மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கெட்டிக்காரர்கள் இருக்கின்றார்கள். அதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டுக்கின்ற போது எம்மாணவர்களும் கல்வியில் சிறந்து விழங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
3 hours ago