Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 03 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
'தமிழ் மக்களாகிய நாங்கள் 35 வருடகால போராட்ட வரலாற்றில் எங்களின் கல்வியை இழந்துள்ளோம். இதை வளர்த்தெடுக்கவேண்டிய கட்டாயத் தேவை எமக்கு உண்டு. இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, குருமண்;வெளி றொபின் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த கலாசார விழா, குருமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'எமது மாணவச் சமூகம் பல்கலைக்கழகம் செல்வதை மையமாகக் கொண்ட கற்றலுக்கு கொடுக்கும் முன்னுரிமை, தொழில்நுட்பத்துறை சார்ந்த கல்விக்கு கொடுப்பதில்லை. இதனால், பல்கலைக்கழகத்தை தவற விடுகின்ற மாணவர்கள், கூலித்தொழிலுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய சமூகத்தில் தொடர்ச்சியாக உயர்தரம் வரை மாணவர்கள் படிக்கின்றார்கள். உயர்தரத்தில் சித்தியடைந்தால்;, பல்கலைக்கழகம் செல்கின்றர்கள். மற்றையவர்கள் கல்வியை இடைநடுவில் விட்டு, கூலித்தொழிலுக்கும் செல்கின்றார்கள். ஆனால், அவர்கள் தொடர்ச்சிய கல்வியை கற்கக்கூடிய எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், அதனை புறந்தள்ளி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைமை மாறவேண்டும். காரணம் பலதரப்பட்ட தொழிற்கல்விகளை வழங்கக்கூடிய எத்தனையோ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன. இதனை பயன்படுத்தும் வீதம் எம்மவரிடம் சற்று குறைவாக உள்ளது. தொழில்சார் கல்வியில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக எமது இனத்தின் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும்
இவ்வாறு கல்வியை இடைநடுவில் விடுவதன் காரணமாகவே எமது பெண்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு செல்கின்றார்கள். இதனால், அவர்கள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்திற்கொண்டு எமது சமூகம், பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது. ஏதாவது சுயதொழிலை கற்றுக்கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் இதனை தவிர்த்துக்கொள்ள முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025