2025 மே 17, சனிக்கிழமை

கல்லடி வாவியிலிருந்து பொலிஸ் சார்ஜன் மீட்பு

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்புப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் மூழ்கிய பொலிஸ் சார்ஜன்  ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், இன்று சனிக்கிழமை(23) பொழுது புலரும் வேளை கல்லடி வாவியில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்ணுற்ற அவ்விடத்தில் நின்றிருந்த பொலிஸார் வாவியில் குதித்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜனை மீட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அப்துர் றஹ்மான் (வயது 45) எனும் பொலிஸ் சார்ஜனே மீட்கப்பட்டவராகும்.

தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சார்ஜன் எவ்வாறு நீரில் மூழ்கினார் என்பது குறித்து மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .