2025 மே 17, சனிக்கிழமை

அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய வருடாந்த நிர்வாகத் தெரிவு

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய வருடாந்த நிர்வாகத் தெரிவு, இணைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(29) இடம்பெற்றது.

இணைய யாப்பின் அடிப்படையில் வருடத்துக்;கு ஒருமுறை புதிய நிர்வாக தெரிவு செய்வது வழக்கமாகும். அதன் அடிப்படையில் இவ்வாண்டுக்கான
புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக சமுக அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கங்கேஸ்வரி, செயலாளராக வீட்டு வினைத்திறன் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த சபாரெட்ணம் சிவயோகநாதன் (சீலன்), பொருளாளராக தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். நளீம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவராக ஏறாவூர் சமூக அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.ரி. நஜிமுதீன், உப செயலாளராக அகம் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். திலீப்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வமைப்பின் இணைப்பாக்கமாக மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இயங்குகின்ற 14 நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.

இணையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறுவதற்கு முன்பதாக பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வித்தியாவுக்காக 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .