2025 மே 17, சனிக்கிழமை

சாதகமான பதில் இல்லாவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காவிட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்பது என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டம் இன்று சனிக்கிழமை  (30) காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடாத்தியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றிய நிலையே காணப்படுவதாகவும் தமது நிலைமைகள் தொடர்பில் யாரும் இதுவரை கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

தம்மை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த பார்ப்பதாகவும் தங்களது தேவைகள் குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லையெனவும் இதன் போது பட்டதாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .