Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 31 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறுமையை பயன்படுத்தி கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்தார்களே தவிர, யாரும் அந்த வறுமையை இல்லாமல் செய்வதற்கு துணிவுடன் செயற்படவில்லை என சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சமூர்த்தி திணைக்களமூடாக திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் வீதிகள், பாலங்கள், கட்டடங்கள் பற்றி பேசி உங்களின் வாக்குகளை பெறமுயன்றனர். உங்களின் வாழ்வாதாரம் பற்றி பேசவில்லை. வாழ்வாதாரத்தின் மூலம் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் என்று பேசவில்லை' என்றார்.
எதுவுமற்றவர்களாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கடன் திட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். இந்த மாவட்டத்திலுள்ள வறுமையை ஒழித்து, சிறந்த சமூகத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தக் கடன் திட்டமானது ஹம்பாந்தோட்டையிலும் பொலன்னறுவையிலும் மட்டக்களப்பிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையிலும் பொலன்னறுவையிலும் இந்தக் கடன் தொகையை செலுத்தும் காலமாக மூன்று வருடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு விசேட அமைச்சரவையின் அனுமதியின் கீழ் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது' என்றார்.
'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்வுக்கு கொண்டுவரவேண்டும் என்ற வகையிலேயே புதிய புதிய திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்' எனவும் அவர் கூறினார்.
இதன்போது, 300 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் படி திரியசவிய கடன் வழங்கப்பட்டது.
அத்துடன், சமமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் 35 பேருக்கு நிதியுதவியும்ம் வழங்கப்படது.இந்த நிதியுதவியானது இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.ஒரு மாணவிக்கு இரண்டு வருடங்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025