Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 01 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சமூர்த்தி வங்கிகளில் முடங்கியிருந்த கறுப்புப் பணத்தை பயன்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உணவு முத்திரைகளை பெற்றுவந்தவர்கள், தற்போது சமூர்த்தி வங்கிகளில் பணம் பெறுகின்றனர்.
இந்த நாடு வறுமையான நாடு என்ற அடிப்படையிலேயே உணவு முத்திரை திட்டம் வகுக்கப்பட்டது. எமது நாடு வறுமையான நாடு என்று கூறிக்;கொண்டிருப்போமானால், இந்தத் திட்டத்திலிருந்து உலக வங்கி பின்நோக்கி செல்லும் நிலையேற்படும்' என்றார்.
'கூடுதலான மக்கள் வறுமையில் உள்ளதன்; காரணமாக அவர்கள் சுயதொழில்களை மேற்கொள்வதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கிவருகின்றது. இது வறுமையில் வாடும் மக்களை வறுமையிலிருந்து நீக்;குவதற்கான வழியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்று பல நல்ல திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், எதிர்காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு கலைக்கப்படுமானால், மீண்டும் இது போன்ற நல்லாட்சி ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025