2025 மே 17, சனிக்கிழமை

'நல்லாட்சியே எமது அரசியல் இலட்சியம்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சி என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அரசியல் கோஷமல்ல. அரசியல் இலட்சியமாகும் என்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்  எம்.எம்.ஏ.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு காத்தான்குடியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நல்லாட்சி என்பது அரசியல் கோஷமாக மட்டுமே மாறியுள்ளது. ஆனால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு நல்லாட்சி என்பது அரசியல் இலட்சியமாகும். இன்று நல்லாட்சி தொடங்கப்பட்டுள்ளதால்,  பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. அதனை ஜனாதிபதியால் மாத்திரம் செய்யமுடியாது.

நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற ஒரு நாடாளுமன்றம் தேவை, அந்த நாடாளுமன்றத்திலிருந்து நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற ஒரு அமைச்சரவை தேவை. இன்னும் பல அதிகார கட்டமைப்புக்கள் தேவை. இதனை பொதுமக்களே  தெரிவுசெய்ய வேண்டும்' என்றார்.

'ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இப்போது ஒரு தேசிய சக்தியாக பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம். இதற்கிணங்க வரும் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி களமிறங்கவுள்ளது. சில மாவட்டங்களில் எமது வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவார்கள். இன்னும் சில மாவட்டங்களில் நாங்கள் ஒப்பந்தம் செய்துகொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்' என அவர் கூறினார்.

'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில்  இரண்டு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான  வேலைத்திட்டத்தை  மேற் கொண்டுவருகின்றோம்' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .