Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 02 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
பௌத்தம் மற்றும் முஸ்லிம் மதப்போதனை ஆசிரியர்கள் அரசாங்க ஆசிரிய சேவையினுள் கல்வியமைச்சினால் உள்வாங்கப்பட்டபோதிலும், இந்து ஆசிரியர்கள் எவரும் எந்த நியமனங்களுக்குள்ளும் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கூழாவடி விபுலானந்தா அறநெறிப் பாடசாலையின் விளையாட்டுப்போட்டி திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சுமார் 25 வருடங்களாக இந்து கலாசார திணைக்களம் அறநெறிப் பாடசாலைகளை தனது திணைக்களத்தின் கீழ் வைத்து நடத்துகின்றது. ஆனால், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இதுவரையில் நியமனங்களோ, ஊதியமோ வழங்கப்படவில்லை. என்றார்.
'இலங்கையில் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகள் உள்ளன. இவை போதிய வசதிகளின்றி இயங்குகின்றன.
அறநெறிப் பாடசாலைகளை வளப்படுத்துவதற்கு இந்து கலாசார திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும், இந்தப் பாடசாலைகளில் நியாயமாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் எதுவும் அரசாங்கத்தினால் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025