2025 மே 17, சனிக்கிழமை

விசேட பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளினால்  கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட 600 முஸ்லிம், சிங்களப் பொலிஸாரின் நினைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் விசேட பிரார்த்தனை  இடம்பெற்றது.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் பொலிஸ்; நிலையங்களில் கடமையாற்றிய 600 முஸ்லிம், சிங்களப் பொலிஸார் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர்.

இதன் நினைவாக ஆண்டு தோறும் கொல்லப்பட்ட பொலிஸாருக்காக விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பிரார்த்தனையில்; சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.கே.தானக, பொலிஸ் சமூக சேவைகள் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.அப்துல் மஜீத், மற்றும் மதகுருக்களான மௌலவி காரியப்பர் றம்ஸி, எம். முஸ்தபா, குமாரிகம சமீத் தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .