2025 மே 17, சனிக்கிழமை

'போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.சபேசன்

காணாமல் போனோரை மீட்டுத்தரக் கோரி வட, கிழக்குப்  பெண்கள் பல போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும்  இதுவரை கிடைக்காமல் இருப்பது வேதனைக்குரியது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்

மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கண்ணகி தனது கணவனுக்காக நீதி கோரி மதுரை நகரை எரித்து நீதி பெற்ற வரலாறு இருக்கின்றது. ஆனால், இந்த நாட்டில் பெண்கள் தங்கள் கணவன் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரியும் அதற்கான நீதியினை பெறமுடியாதவர்களாக இருக்கின்றனர்.

பெண்களுக்குத்தான் இன்று சுதந்திரம் இல்லை என்றால் ஆண்களுக்கும் சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்டூரில் அரச உத்தியோகத்தர் மதிதயான்; கொல்லப்பட்டார். இதனைக் தட்டிக்கேட்க பொது அமைப்புக்கள்; முன்வரத் தயங்குகிறன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு காலவரையரையை கொடுத்து இருக்கின்றோம். அதற்கு பின் மக்களைத்திரட்டி மதிதயானுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்த இருக்கின்றோம். அதற்காக எமது மக்கள் முன்வரவேண்டும்' என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .