2025 மே 16, வெள்ளிக்கிழமை

துஷ்பிரயோகங்கள், வன்முறைகளுக்கு போதைப்பாவனையே காரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெண்களுக்கு எதிரான  பாலியல் துஷ;பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு  போதைவஸ்துப் பாவனையே பிரதான காரணம்; என்று தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உபதலைவர் எம்.சி.ஸஹ்றான் தெரிவித்தார்.

'மாணவி வித்யாவின் படுகொலை வேண்டி நிற்கும் சமூக மாற்றங்கள்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'போதைவஸ்துப் பாவனையை ஒழிப்பதற்கு ஒவ்வொரு மதத்தினரும் பாடுபடவேண்டும். எல்லா மதங்களின் அறிவுரைகளும் போதைவஸ்தை பாவிக்காதே என்று  கூறப்படுகின்றது. போதைவஸ்;து பாவனைக்கு எதிராக நல் உபதேசங்களையும் அனைவரும் செய்கின்றனர்.  விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்கள். இருந்தபோதிலும், இது போதாது' என்றார்.

'போதைவஸ்துக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக சட்டங்களை இயற்றினாலும், போதைவஸ்துப் பாவனையும் அதன் விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது. போதைவஸ்து குறித்து கடுமையான எச்சரிக்கை செய்வதுடன், அதன் பாதிப்பு குறித்தும் சமூகத்தில் போதையினால் ஏற்படும்  சீரழிவுகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .