Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 04 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சுயநலத்துடன் கூடிய தமது இருப்பையும் சலுகைகளையும் பலப்படுத்துவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றவர்களின் செயற்பாடுகளை அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர்கள்; சங்கத்தின் தேசிய துணை இணைப்பாளர் கு.ஜகநீதன் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
'தாதிய தொழிற்சங்கமானது தாதியர் உரிமையை பாதுகாப்பதுடன், தாதியச் சேவையினை மேன்மைப்படுத்தி அதனூடாக ஒரு சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எமது மாவட்டத்தில் இதனை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் விசேட தேவையுடைய தாதிய உத்தியோகத்தர்கள் அகில இலங்கை தமிழ்; தாதியர் சங்கம் என்ற பெயரால் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தகைய தூரநோக்கற்ற சுயநலத்துடன் கூடிய தமது இருப்பையும் சலுகைகளையும் பலப்படுத்துவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றவர்களின் செயற்பாடுகளையும் முனைப்புகளையும் எமது அரசதாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
எனவே, சகலரும் இதில் கவனமெடுத்து இன அடையாளமற்ற மக்களுக்கான சேவையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என எமது சங்கம் எதிர்பார்க்கின்றது. குறிப்பாக எதிர்காலத்தில் இத்தகையோரின் கோரிக்கைகள் அரசியல்வாதிகளிடம் வரும்போது அவர்கள் தனிநபரை பார்க்காது இச்சமூகத்தின் நலனைப் பார்க்கவேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago