2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு புதிய சந்தைக்கான கட்டட பணிகள் பூர்த்தி

Gavitha   / 2015 ஜூன் 04 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமுல்படுத்தப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக்கான மாடிக்கட்டடம் பூர்த்திடைந்துள்ளன.

புறநெகும திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சபையினால் உலக வங்கியின் உதவியினால் 30.9 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் புதன்கிழமை (03) பார்வையிட்டார்.

நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் மேல் மாடியில், அரச ஒசுசல மற்றும் சதோச நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது, மாநகரசபையின் பொறியியலாளர் ரி. தேவதீபன், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் எல். பிரசாந்தன், நிர்மாண ஆலோசகர் கே. சிவலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .