2025 மே 16, வெள்ளிக்கிழமை

காணிகள் அத்துமீறிப்பிடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டப்பேரணி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 202ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அத்துமீறிப் பிடிப்பதாகக் கூறி அப்பகுதி மக்களினால்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  இன்று வியாழக்கிழமை காலை  ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமான  இப்பேரணி  மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை சென்றது.

தங்களது காணிகளை முஸ்லிம் மக்கள் பிடித்து  குடியேறிவருகின்றனர். எனவே, தங்களுடைய  காணிகளை அவர்களிடமிருந்து மீட்டுத்தர சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று   ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .