Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவருவதில் சிறுபான்மை மக்கள் பாரிய பங்களிப்பு செய்தனர். அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப ஆய்வு கூடத்தை நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை திறந்து வைத்த பின்னர், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் யு.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்றது.
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது அவர் ஜனாதிபதியாக வருவார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவருவதில் சிறுபான்மை மக்கள் பாரிய பங்களிப்பு செய்தனர். அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட இலங்கையின் நாலா புறங்களிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.' என தெரிவித்தார்.
'ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியின் கீழ் கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.
இலங்கையிலுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளில், இந்த தொழிநுட்ப ஆய்வு கூட திட்டத்துக்காக ஆயிரம் பாடசாலைகள்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதிலும் 250 பாடசாலைகளில்தான் இந்த தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தப்பாடசாலையும் ஒன்று என்பதையிட்டு நாம் பாராட்டுகின்றோம்.' என கூறினார்.
'காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும்.
இன்னும் ஓரிரு வருடங்களில் தொழிநுட்பம் இன்னும் வளர்ச்சியடையும் தற்போதுள்ள கணினிகள் எல்லாம் புதிய தொழிநுட்பத்தின் கீழ் மாற்ற வேண்டி ஏற்படும். கணினியுகம் வளர்ச்சியடைந்தே செல்கின்றது.'
'மட்டக்களப்பு மாவட்டம் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் போன்றவற்றில் இலங்கை தேசிய மட்டத்தில் இரண்டாவது மூன்றாவது இடங்களை பெற்றுள்ளது. இது வரவேற்க கூடிய விடயம்.
இந்த மாவட்டத்தில் விஞ்ஞான பாடத்துக்கான ஆசிரியர் தட்டுப்பாடு இருக்கின்றது.
தகவல் தொழிநுட்ப பாடத்துக்கான ஆசிரியர் தேவையும் இருக்கின்றது. இந்த தேவைகளை நிவர்த்தி செய்தால் தான் மாணவர்களை உயர்ந்த இடத்துக்கு அனுப்ப முடியும்.' என குறிப்பிட்டார்.
'மாணவர்கள் இந்த நாட்டின் சொத்து மாணவர்கள் முதலீடு. மாணவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு விடயமும் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு செய்யும் முதலீடாகும்.
இந்த முதலீடு இருந்தால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும். எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் இந்த புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகும்.'
'தொழிநுட்ப ஆய்வுகூட கட்டடத்தை கட்டி முடித்து திறந்து வைத்தால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க முடியாது. அதற்கு தேவையான தொழிநுட்ப வசதிகளை வழங்க வேண்டும்.
இவையெல்லாம் செய்வதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தின் மூலம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களுண்டு' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago