2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம்

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு, உக்கும் குப்பைகள் மற்றும் உக்காத குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பான அறிவூட்டல் வேலைத்திட்டம் காத்தான்குடி நகர சபையினால் நேற்று வெள்ளிக்கிழமை (05)  முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ், குப்பைகளை மீள் சுழற்சி செய்து பசளை தயாரிக்கும் நிலையத்தில் இந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் இந்த அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தினை நடாத்தினார்.

யுனப்ஸ் நிறுவனம் மற்றும் பிலிசறு நிறுவனங்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .