2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதி காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் பாலமுனை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன்   நவீன பஜீரோ ரக வாகனம் மோதியதால்,  பஜீரோ ரக வாகன சாரதி காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்தின்போது இரு வாகனங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

பஜீரோ ரக வாகன சாரதி இங்கிலாந்திலிருந்து  இலங்கைக்கு திரும்பியிருந்தார். கிளிநொச்சியை சேர்ந்த இவர்,  கல்முனையில் திருமணம் செய்துள்ளார்.

வர்ணப்பூச்சுக்களை ஏற்றிவந்த  இந்த லொறி பாலமுனைச் சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .