Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினையை தீர்ப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (06) முன்னணியின் காத்தான்குடி பிரதேச காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்,தேசிய அமைப்பாள் எம்.வி.எம்.பிர்தௌஸ் நழீமி, பிராந்திய சூறாசபையின் செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, காத்தான்குடிப் பிரதேசத்தில் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினையின் புதிய நிலை என்ன? இதற்கான நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆலோசனைகளும் அணுகுமுறைகளும் என்ன?
காத்தான்குடி நகரசபையின் பதவிக்காலம் முடிவுற்றிருக்கும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் எவை? இதற்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு இருக்கும் சாதகமான சூழ்நிலைகள் உள்ளிட்ட பல விடயங்கள தொடர்பில் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago