2025 மே 16, வெள்ளிக்கிழமை

முத்திரை இடாத அளவைக் கருவிகள்; 27 வர்த்தகர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த ஐந்து மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 260 வர்த்தக நிலையங்களில் அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து,  முத்திரை இடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 27 வர்த்தக உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாக்த் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜு{ன் எட்டாம் திகதிவரை நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை பதித்ததன் ஊடாக  இத்திணைக்களத்துக்கு  10 இலட்சத்து 63,000 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .