2025 மே 16, வெள்ளிக்கிழமை

வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரேரணை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வில்பத்து விவகாரம் மற்றும் மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள  தடை தொடர்பில்  எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் தனி நபர் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக   அம்மாகாணசபையின்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நேற்று செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  'அரசியலுக்கு அப்பால் சமூகம் சார்ந்த விடயங்களில் நான் அக்கறை செலுத்திவருகின்றேன்.  அந்த வகையில்,  மேற்படி பிரச்சினையை  வடபகுதி முஸ்லிம்களின் பிரச்சினை என்று பார்க்காது, ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாக பார்க்கின்றேன். இதனால்,  மேற்படி பிரச்சினை தொடர்பில்  தனி நபர் பிரேரணையை  கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கவுள்ளேன்' என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .