2025 மே 16, வெள்ளிக்கிழமை

தும்பங்கேணி கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஆரம்ப நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தின் மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஆரம்ப நிகழ்வு, தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. 

சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.கிருபைராசசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, 500 கால்நடை பண்ணையாளர்களுக்கு தலா ஒவ்வொரு நைலோன் கயிற்று வண்டல்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .