2025 மே 16, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட முதிரைமரக் குற்றிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட  30 முதிரைமரக் குற்றிகளை  நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளதாக   வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.

புலிபாய்ந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து,  புலிபாய்ந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளில் சோதனை  மேற்கொண்டதாகவும் இதன்போது,  பொண்டுகல்சேனை பகுதியில் இந்த முதிரைமரக் குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன்போது,  சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுடன் வாழைச்சேனை பொலிஸாரும்  இணைந்து சட்டவிரோத மரக் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருவதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .