2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் வர்த்தகர்கள் அறுவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில், முத்திரை பதிக்கப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு வர்த்தகர்களை கைதுசெய்ததாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாத் தெரிவித்த்தார்.

செட்டிப்பாளயம், ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில், மேற்படி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மின்சார தராசுகள், சாதாரண தராசுகள், படி தராசுகள், திரவங்களை அளக்கும் கருவிகள், போலியான அளவைக் கருவிகள், மீற்றர் அளவைக் கோல்கள் என்பன முத்திரை பதிக்கப்படாமல் பாவனையிலிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அவர்கள் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .