2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆலோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவோம்: ஹிஸ்புல்லாஹ்

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நூதனசாலையில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான அம்சங்கள் இருப்பின், அது தொடர்பாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை வழங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவோம் என முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு அவர் இன்று(10) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்க ரீதியான பிரச்சினைகள் எழுந்த போதும் அதற்கான  ஆலோசனைகளை வழங்குமாறு காத்தான்குடி நகர சபை தவிசாளரால் தங்களுக்கு கடந்த 30.3.2015ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக தங்களது சபை பிரதிநிதிகள் குழு விரைவாக விஜயம் செய்து நேரடியாக பார்வையிட்டு மார்க்கத்துக்கு முரணான அம்சங்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பான ஆலோசனைகளை முன் வைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .