2025 மே 16, வெள்ளிக்கிழமை

கல்லடி விபத்தில் வாகனங்கள் சேதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று கார் ஒன்றை முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் கார் முற்றாக சேதமடைந்ததுடன் வேனின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இவ்விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிப் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .