2025 மே 16, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய குழு, மட். அரசாங்க அதிபர் சந்திப்பு

George   / 2015 ஜூன் 11 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை ஊடாக தொழில்துறைகளை விருத்தி செய்தல் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, செவ்வாய்க்கிழமை(09) மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திணைக்களத்தின் முதலாவது செயலாளர் மைக்கல் நியூமன், பீற்றர் மோரிஸ், திட்ட அமுல்படுத்தல் விசேட நிபுணர் அனா கிப்புர்ட் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பங்குகொண்டனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள், அதனுடனான கைத்தொழில்கள், சுய முயற்சிகள் தேவைப்பாடுகள், பயிற்சி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் கலந்துரையாடப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .