Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
என்னைப் பயமுறுத்தி தன் முன்னால் முழங்காலிட வைக்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதை செய்ய முடியாமல், தற்போது அவர் முழங்காலிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலயத்தை திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எமது கட்சி உருவாகி சொற்ப காலத்துக்குள் மைத்திரியின் வெற்றிக்காக 4 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
நாட்டின் பங்காளிகளாக ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளார்கள். கடந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்கமாட்டார். கடந்த அரசில் உள்ள அமைச்சர்கள் எங்களுடன் இணைந்து வந்தால் சேர்த்துக்கொள்வோம்.' என தெரிவித்தார்.
'நாட்டில் சமாதானத்தை உருவாக்க பாடுபட்டோம். ஆனால், எங்களிடம் இனவாதம் காணப்படவில்லை. யாவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. கடந்த கால அரசியல் தலைவர் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார்.
தென்பகுதி மக்களை மாத்திரம் வைத்து பிரசாரம் செய்தார். பேருவளை நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது நான் அதை எதிர்த்தேன்.'
'நாட்டை நல்வழிக்கு எடுத்துச் செல்ல முற்படும்போது அரசிலும் எதிர்க்கட்சியிலும் சில விசமசாரிகள் உள்ளார்கள். நாம் எதிர் கால சிறுவர்கiளுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை ஒளி மயமாக்கவுள்ளோம்.'
' கடந்த 10 வருட காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகள் மிகவும் இருள் சூழ்;ந்த நிலை காணப்பட்டது. வடக்கு, கிழக்கு, தென் பகுதிகளில் மத வாதிகள் மற்றும் இனவாதிகள் காணப்படுகின்றார்கள். இதை உணர்ந்து தான் எமது ஜனநாயகக் கட்சியை உருவாக்கினோம். எமது கட்சியில் இணைந்து ஒளிமயமான யுகத்தை உருவாக்க உதவி புரியுங்கள்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
1 hours ago
4 hours ago