2025 மே 16, வெள்ளிக்கிழமை

'நல்லாட்சி மாற்றத்துக்கு நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் உண்டு'

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமோ அல்லது எங்களது கட்சியான ஜனநாய கட்சி மாத்திரமோ கொண்டுவரவில்லை. நல்லாட்சி மாற்றத்துக்கு நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் உண்டு என்று ஜனநாய கட்சியின் தலைவரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனநாய கட்சியின் கல்குடாத் தொகுதி கிளை ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆர்.எம்.புஹாரி தலைமையில் அல் - கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இருந்த ஊழல் ஆட்சியை இல்லாமல் செய்து இந்த நாட்டில் நிலையான நல்லாட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைவரும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே நல்லாட்சி ஏற்பட்டது.

தற்போது ஆட்சியில் உள்ள இரண்டு பெரும் கட்சிகளிலும் கள்ளவர்கள் உள்ளனர் கடந்த அரசாங்கத்தில் இருந்த கள்வர்களை இல்லாமல் செய்தது போல் எதிர்காலத்தில் தற்போதுள்ள சிலரையம் இல்லாமல் செய்து இன ஒற்றுமையுடனான ஆட்சி நிகழ்வதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்களின் உதவியோடு அளுத்கம, பேருவளை போன்ற பகுதிகளில் முஸ்லீம்களுக்கு பிரச்சினை வந்தபோதும் அஸாத் சாலிக்கு கடந்த ஆட்சியாளர்களால் பிரச்சினை எழுந்த போதும் முதன்முதலில் குரல் கொடுத்தவன் தான்தான் என்றவகையில் பெருமைப்படுகிறேன் என்னிடம் இனவாதம் கிடையாது இந்த நாட்டில் உள்ள அனைத்;து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

இதன் போது ஜனநாயக கட்சியின் தலைவரும் பீல் மார்ஷலுமான சரத் பொன்சேகாவின் சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்ட நிகழ்வில் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .