2025 மே 16, வெள்ளிக்கிழமை

தகவல் முகாமைத்துவ, கணினி தரவு நிரற்படுத்தல் பயிற்சி

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாடசாலை தகவல் தொழிநுட்ப ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தகவல் முகாமைத்துவ ஆசிரியர் இணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை சனிக்கிழமை (13) தன்னாமுனை மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப்பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

பாடசாலை மட்ட தகவல் முகாமைத்துவ முறை, கணினி நிலைய செயற்பாடுகளையும் வலுவூட்டும் வகையிலேயே இது நடத்தப்படுகிறது.

தரவுகள் சேகரித்தல், தரவு பகுப்பாய்வு செய்தல், தரவை இற்றைப்படுத்தல் தொடர்பான இப்பயிற்சி நெறியில் பாடசாலை தகவல் தொழிநுட்ப ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தகவல் முகாமைத்துவ ஆசிரிய இணைப்பாளர்கள் 40பேர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

வேள்ட்விஸன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்பயிற்சி நெறியில் வலயக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மண்முனை தென் மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .