2025 மே 16, வெள்ளிக்கிழமை

வீட்டு மானியம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மீள்குடியேற்ற, புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஒன்றிணைந்த நிவாரண உதவித் திட்டத்தின் கீழ், புணாணை கிழக்கு மக்களுக்கான வீட்டு மானியம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) மட்;டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புணாணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற, புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம் நஜீமுடின், புனர்வாழ் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர்களான என்.பத்மநாதன், எஸ்.எம்.பதூர்தீன், கே.ஆர்.வீரத்ன, மட்டக்களப்பு  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 50 பயனாளிகளுக்கு வங்கியில் வைப்பில் இடப்பட்ட வைப்பு புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நான்கு கட்டங்களாக குறித்த மக்களுக்கு வீடு கட்டுவதற்கான பணம் வழங்கப்படும் என்றும் இவர்கள் சொந்த இடங்களில் குடியேறி வாழ்வாதார தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எள்றும் அவ்வேளையில், அவர்களினால் முன்வைக்கப்படும் தொழில் முயற்சி திட்டங்களுக்கு ஏற்ப மேலதிக நிதிவசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இம்மக்கள் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில்; மேற்படி பிரதேசத்தில்  ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை, கொழம்பு, கண்டி போன்ற இடங்களில் வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .