Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோது, அரச பணம், மக்களின் வரிப்பணம் வீண்விரையம் செய்யப்பட்டதை போன்று தற்போதைய ஆட்சியில் இடம்பெறமாட்டாது என கிழக்கு மாகாண முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் ஜூன் மாத அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை(16) இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் முன்வைத்தை பிரேரணை தொடர்பில், எதிர்க்கட்சி உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கில் தற்போது நல்லாட்சி மலர்ந்திருக்கிறது. இந்நல்லாட்சியில் என்ன நடைபெறுகிறது, என்ன விடயங்கள் நடைபெறவிருக்கிறன என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
இனமத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சரியான சேவைகள் சென்றடைய, கிழக்கு மாகாண ஆட்சியில் இணைந்திருக்கும் கூட்டு மிகவும் தெளிவாக இருக்கிறது.
கடந்த ஆட்சியில் நடந்த அநியாயங்கள் இந்த ஆட்சியில் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது.
அதற்கான நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக மேற்கொள்ள தீர்மானித்து, அதனடிப்படையில் நடவடிக்கைகளை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் வெளிப்படையாக நடந்து கொண்டார்களா என்பது மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது.
நிதியொதுக்கீட்டில் மோசடி நடக்கிறது என்று உறுப்பினர் கூறுவதில் சிறிதளவும்; உண்மையில்லை.
பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது அரச பணங்கள், மக்களின் வரிப்பணங்கள் வீண்விரையம் செய்யப்பட்டமை போன்று இன்றைய ஆட்சியில் இடம்பெற மாட்டாது.
அனைத்து செயற்பாடுகளும் சபைக்கும் மக்களுக்கும் சரியான முறையில் அறிவிக்கப்படும் அதன்பின்னர் எங்கே என்ன நடைபெற்றுள்ளது என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago