2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலக்கிய உலகில் அருள்செல்வநாயகத்தின் படைப்புக்கள்: கட்டுரைப்போட்டி

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

எழுத்தாளர் அருள் செல்வநாயகத்தின் நினைவை முன்னிட்டு 'இலக்கிய உலகில் அருள்செல்வநாயகத்தின் படைப்புக்கள்' எனும் தலைப்பில் கட்டுரை போட்டியை நடத்தவுள்ளதாக 'தென்றல்' மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன், இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இப்போட்டியில்; தரம் 10 முதல் தரம் 13 வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்துக்கொள்ள முடியும். இக்கட்டுரை போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தமது ஆக்கத்தை 300 சொற்களுக்கு குறையாமல் எழுதி பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்த வேண்டும்.

எழுதும் கட்டுரைகளை  'தென்றல்', 44/1 பளைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்ற முகவரிக்கு, எதிர்வரும், ஜுலை 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
 
இப்போட்டியில் வெற்றியீட்டுவோருக்கு முதல் பரிசாக 3000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 1000 ரூபாவும் வழங்கப்படும். 

அத்தோடு, ஆறுதல் பரிசாக ஐவருக்குத் தலா 500 ரூபாய் வழங்கப்படுவதோடு தெரிவு செய்யப்படும் அனைவருக்கும் எழுத்தாளர் அருள் செல்வநாயகம், சுவாமி விபுலானந்தரைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய 1000 ரூபாய் பெறுமதியான புத்தகம் ஒவ்வொன்றும் வழங்கப்படும். 

வெற்றியீட்டுபவர்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .